தமிழகத்தில் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் 15 அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு

0 270

குடிநீர் மற்றும் பாசனத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் 15 அணைகளின் நீர் மட்டம் கனமழை காரணமாக வேகமாக உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் 15 அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறையின் கீழ் 14,098 ஏரிகளில், 2144 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், 927 ஏரிகளில் 91 சதவீதம் முதல் 99 சதவீதம் வரையிலும், 676 ஏரிகளில் 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீர் இருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் சோழவரம் ஏரிகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments