நீட் தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடக்கம்

0 213

இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கி உள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு அடுத்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று மாலை 4 மணி முதல் தொடங்கி உள்ளது. www.ntaneet.nic.in, www.nta.ac.in என்ற இணையதளங்களில் வரும் 31-ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினருக்கு 1500 ரூபாயும், ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 1400 ரூபாயும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு 800 ரூபாயும் கட்ட வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணங்களுடன் ஜிஎஸ்டி சேவைக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments