மழை பாதிப்புகளை போக்க திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உதவ வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

0 134

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நிவாரண உதவி செய்ய வேண்டும் என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக, கடலூர் உள்பட பல பகுதிகளிலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருப்பதாகவும், விளை நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துத்தரப்பு மக்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

அதுபோலவே, திராவிட முன்னேற்றக்கழகத்தின் அனைத்து நிலையில் உள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரவர் பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாகச் செய்திட வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments