ரூ.40,000 கோடியை பாதுகாக்கவே பட்னாவிஸ் பதவியேற்றார் - பாஜக மூத்த தலைவர் பேச்சால் சர்ச்சை

0 388

மகாராஷ்டிராவில் தேவேந்திரபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றது, மத்திய அரசின் 40 ஆயிரம் கோடி ரூபாயை பாதுகாக்க நடத்தப்பட்ட நாடகம் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த்குமார் ஹெக்டே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாட மாநிலம் உத்தர கன்னடா தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசின் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி மராட்டிய முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறினார்.

தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், அந்த நிதி வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படாமல் தவறாக கையாளப்பட நேரிடும் என்று அவர் குறிப்பிட்டார். எனவே அந்த நிதியைப் பாதுகாப்பதற்காக நாடகம் தேவைப்பட்டதாகவும், அதன்படி தேவேந்திரபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்றதாகவும் கூறினார்.

அடுத்த 15 மணி நேரத்தில் அந்த நிதி பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார். அனந்த்குமார் ஹெக்டேவின் இந்த கருத்து முற்றிலும் தவறானது என்று முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments