கல்யாணமாகி ஒரே நாளில் சோகம்.. புதுப்பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்த மாப்பிள்ளை

0 868

திருமணம் முடிந்த மறுநாளே புதுப்பெண் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவத்தால் உறவினர்கள் அனைவரும் நிலைகுலைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த துயர சம்பவம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாலசா மண்டலம் அருகேயுள்ள கருடகாண்டி என்ற கிராமத்தில் நடந்துள்ளது.

மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த சிகிலிபள்ளி வரலட்சுமியின் மகள் தமயந்தி. இவருக்கும் கோபிநாத் சுரேஷ் என்ற இளைஞருக்கும் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடந்துள்ளது. நந்திகம் மண்டல் சுப்பம்மபெட்டையில் உள்ள லட்சுமிநரசிம்மஸ்வாமி கோவிலில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

பின்னர் அடுத்த நாள் சிறிய அளவில் சடங்கு மற்றும் சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன புதிய தம்பதிக்கு. பின்னர் மாமனார் வீட்டிற்கு புறப்பட தயாரானார் புதுப்பெண் தமயந்தி. அப்போது திடீரென சுருண்டு விழுந்து மயங்கியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் விரைவாக தமயந்தியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக வரும் வழியிலேயே தமயந்தியின் உயிர் பிரிந்து விட்டதாக கூறியுள்ளனர்

இதை கேட்டு அதிர்ந்த புது மாப்பிளை உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் மருத்துவமனையிலேயே கதறி அழுதனர். பின்னர் தமயந்தியின் உடலுக்கு மாப்பிளை வீட்டார் இறுதி சடங்கு செய்தனர்.

புது வாழ்க்கையில் நுழைந்து உற்சாகமாக இருக்க வேண்டிய தமயந்தி திடீரென பலியானதும், அவருக்கு புது மாப்பிளை கோபிநாத் சுரேஷ் இறுதி சடங்கு செய்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments