மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசிய அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக தலைமைக்கு கடிதம்

0 200

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அரசகுமார், மு.க. ஸ்டாலின் அடுத்த முதலமைச்சராக பதவி ஏற்பார் என குறிப்பிட்டு புகழ்ந்து பேசியிருந்தார். இந்த நிலையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். நரேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் மீறிய செயல் என குறிப்பிட்டுள்ளார்.

அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து பதில் வரும்வரை அவர் கட்சி சார்பில் எவ்வித கூட்டங்கள், ஊடக விவாத நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments