உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. அஞ்சுகிறது - ஜெயக்குமார்

0 349

திமுகவில் உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ளதால், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அஞ்சுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான், தமிழக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிட்டது என்றும் அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றது யார்? என கேள்வி எழுப்பினார்.

தேர்தலை தைரியமாக சந்திப்பது தான் எதிர்கட்சிக்கு அழகு என்றும், ஆனால் மக்கள் ஆதரவு இல்லாததன் காரணமாக தேர்தலை சந்திக்க தி.மு.க. அஞ்சுவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments