உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்திருப்பது திட்டமிட்ட ஏமாற்றுவேலை -வைகோ

0 322

முதலில் ஊராட்சிகளுக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்துவதாக அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்ட வஞ்சக திட்டம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு சேர்த்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு பிரிவினை செய்யப்படாமல் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்திருப்பது திட்டமிட்ட ஏமாற்றுவேலை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments