கன மழை காரணமாக மதுரை விமான நிலையத்தில் 3 விமானங்கள் ரத்து

0 257

கன மழை காரணமாக மதுரை விமான நிலையத்தில், 3 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், மதுரையிலிருந்து காலை 7.55க்கு சென்னை செல்லவிருந்த Indigo 6E 7215 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து காலை 8 மணிக்கு ஹைதராபாத் செல்லவிருந்த Indigo 6E 7215 விமானம் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல காலை11.50க்கு மதுரையிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த Indigo 6E 7217 விமானமும் ரத்து செய்யப்பட்டது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மற்ற விமானங்கள்  வழக்கம்போலவே தனது சேவையை மேற்கொண்டுவருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments