அபுதாபி கிராண்ட்பிரி கார்பந்தயப் போட்டியில் ஹாமில்டன் சாம்பியன்

0 142

அபுதாபி கிராண்ட்பிரி கார்பந்தயத்தில் பிரிட்டன் வீரர் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றுள்ளார். நடப்பு சீசனில் கடைசி பந்தயம் அபுதாபியில் பகலிரவுப் போட்டியாக நேற்று நடைபெற்றது.

ஒருவரையொருவர் முந்திச் செல்ல முயன்றதால் பந்தயத்தில் பரபரப்பு காணப்பட்டது. கார்களில் ஏற்பட்ட பழுது காரணமாக முன்னணி வீரர்களான எரிக்சன், ரெய்க்கோனன், ஹல்கென்பெர்க் ஆகியோர் வெளியேற நேரிட்டது.

நடப்பு சீசன் உள்ளிட்ட ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்டன், ஒரு மணி 39 நிமிடம் 40 வினாடிகளில் இலக்கைக் கடந்து முதலிடத்தைப் பிடித்தார்.

ஹாமில்டனுக்கு இது 84வது சாம்பியன் பட்டமாகும். ஜெர்மனி வீரர் வெட்டல் இரண்டாம் இடத்தையும், பெல்ஜியம் வீரர் வெர்ஸ்டாப்பன் 3வது இடத்தையும் பிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments