பெண் டாக்டர் பலாத்காரம்-கொலை புதிய தகவல்கள்

0 232

ஹைதராபாதில் பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொலை செய்த முக்கிய குற்றவாளி அந்த கொடுமைக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வாகனப் போக்குவரத்து போலீசாரிடமிருந்து தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹைதராபாத் பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் அந்த குற்றம் நடந்தது எப்படி என்பது குறித்த விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதன் படி முக்கியக் குற்றவாளியான முகமது அலி ஆரிப் இரண்டு ஆண்டுகளாக உரிமம் இல்லாமல் சரக்கு லாரி ஓட்டி வந்தபோதும் போலீசாரிடம் சிக்கவில்லை.

கடந்த நவம்பர் 24ம் தேதி முகமது அலி, வாகன கிளீனர் ஜொல்லு சிவா, கர்நாடகத்தில் இருந்து செங்கல் லோடு ஏற்றி ஹைதராபாத் சென்றனர். இந்நிலையில் நவீன், சென்னகேசவலு ஆகிய மேலும் இருவரை அழைத்த அலி, கூடுதல் லோடு ஸ்டீல் கம்பிகளை ஏற்றிக் கொண்டு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டனர். 3 பேருடன் ஹைதாராபாத் வந்த அவர்கள் நவம்பர் 25ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மெஹபூப் நகரில் வாகன சோதனையின் போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

வாகன உரிமம் இல்லாததால் லாரியை பறிமுதல் செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதனால் சாமர்த்தியமாக செல்ப் ஸ்டார்ட் கேபிளை பிடுங்கி சரக்கு வாகனத்தை நகராமல் செய்த முகமது அலி சற்றுதூரமாக போலீசார் நகர்ந்ததும் வண்டியை ஸ்டார்ட் செய்து தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.
ஸ்டீல் சரக்குகளை இறக்கி 4 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்ட நால்வரும் நவம்பர் 26ம் தேதி ஷம்சாபாத் அடைந்து அங்கும் போலீசார் துரத்தியதால் தொண்டுபள்ளி வந்து காலை 9மணி அளவில் பாலம் அருகில் மதுவாங்கி அருந்தினர்.

அப்போதுதான் அந்த பெண் மருத்துவர் தனது பைக்கை அந்த லாரி அருகில் நிறுத்தி விட்டு செல்வதை கண்டு அவரை பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர். அந்த பெண் இருசக்கர வாகனத்தை எடுக்க வரும் போது, பஞ்சர் செய்த அவர்கள் பலவந்தமாக அவர் வாயில் மதுவை ஊற்றி மயக்கமடைய வைத்து தங்கள் கொடுமையை அரங்கேற்றியதாகவும் பின்னர் எரித்துக் கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

வாகன சோதனையின் போது லாரியை போலீசார் பறிமுதல் செய்திருந்தால் இந்த கொடுமை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.கைது செய்யப்பட்ட நால்வரும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்க தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments