ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய சரக்கு வேன்

0 1295

கிருஷ்ணகிரியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் ஒன்று, சுங்கச்சாவடியின் உள்ள பூத் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதி கோர சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே வந்தது.

அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிச்சென்று அங்குள்ள பூத்தின் மீது மோதியது. அந்த பூத்தை பெயர்த்து எடுத்துச் சென்ற சரக்கு வேன், அவ்வழியாக சென்ற இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் 2 பேர் உயிரிழந்தனர்.

சுங்கச்சாவடி பூத்தில் இருந்த கவிதா என்ற பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சரக்கு வேன் ஓட்டுநரை தாலுக்கா காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments