திருச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்க திட்டம் என தகவல்

0 415

திருச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்க மத்திய அரசுக்கு இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ((Airports Authority of India )) பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள், இந்திய விமான நிலையங்கள் ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளன. விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அந்த ஆணைய கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

இதில் திருச்சி, ராய்ப்பூர், இந்தூர், புவனேஸ்வர், வாரணாசி, அமிர்தசரஸ் ஆகிய 6 இடங்களில் இருக்கும் விமான நிலையங்களை தனியார்மயமாக்க பரிந்துரை செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த பரிந்துரை, விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments