அயோத்தியில் மிகப்பெரிய ராமர் கோயில் கட்டப்படும் - ராஜ்நாத் சிங்

0 363

அயோத்தியில் மிகப்பெரிய ராமர் கோயில் கட்டப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் போகாராவில் ((bokaro)) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் அறிக்கைகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் பாஜக நிறைவேற்றும் என்றும், அதுபோல அயோத்தியிலும் மிகப்பெரிய ராமர் கோயிலை கட்டும் என்றும் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு ((Nrc)) அமல்படுத்தப்படும் என்ற ராஜ்நாத் சிங், ஒவ்வொரு குடிமக்களுக்கும் சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியிருப்போரை தெரிந்து கொள்ளும் உரிமை இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக வெற்றிபெற்று முழு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments