துருக்கியிலிருந்து வெங்காயம் இறக்குமதி

0 1145

நாடு முழுவதும் நிலவிவரும் வெங்காயத் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக, துருக்கியிலிருந்து 11,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக உற்பத்தி குறைந்ததால் நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு, விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தட்டுப்பாட்டை போக்க தீவிர முயற்சியில் இறங்கிய மத்திய அரசு முதற்கட்டமாக எகிப்து நாட்டிலிருந்து 6ஆயிரத்து 90 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவுசெய்தது. அவை டிசம்பர் மாத மத்தியில் இந்தியாவுக்கு வரவுள்ளன.

இதனிடையே துருக்கி நாட்டிலிருந்தும் 11,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த வெங்காயம் டிசம்பர் மாத இறுதி அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியா வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments