லாராவின் சாதனையை ரோகித் ஷர்மா முறியடிப்பார் - டேவிட் வார்னர் கணிப்பு

0 454

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 400 ரன்கள் அடித்த பிரையன் லாராவின் சாதனையை, இந்திய வீரர் ரோகித் சர்மா தகர்க்க வாய்ப்புள்ளதாக முச்சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கணித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட்டில், துவக்க வீரராக களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், முச்சதம் அடித்து சாதனை படைத்தார். இதையடுத்து அவர் பாராட்டு மழையில் நனைந்துவருகிறார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், டெஸ்ட்டில் ஒரே போட்டியில் 400 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் லாராவின் சாதனையை, ரோகித் சர்மா முறியடிப்பார் என தான் நம்புவதாக தெரிவித்தார். ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளிலேயே மூன்று முறை இரட்டை சதம் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments