பாங்காக்கில் இருந்து வந்த பயணியிடமிருந்து தங்கம் பறிமுதல்

0 235

பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் கடத்தப்பட்ட 18 லட்சம் ரூபாய் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியை சேர்ந்த சேக் முகமது என்ற பயணியின் உடைமைகளை சோதனையிட்ட போது பெட்டியின் உள்ளேயும் தமது உள்ளாடைக்குள்ளும் மறைத்து கொண்டு வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் 473 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதன் மதிப்பு 18 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் என்றும் சுங்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments