பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை...!

0 500

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வீராணம் ஏரி நிரம்பி வழிவதால் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேற்குத்தொடர்ச்சி

மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 5650 கன அடி வீதம் வந்துகொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 350 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

image

இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் கரையை ஒட்டி அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோவில் நீரில் மூழ்கியது. தொடர் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது

image

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments