உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம்...

0 191

தேசிய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம் பிடித்து, மத்திய அரசின் விருதினை பெற்றுள்ளது.

10-வது இந்திய உடல் உறுப்புதான தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில்,  இதற்கான விருதினை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரிடம் ,மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் மற்றும் இணை அமைச்சர் அஸ்வின் குமார் சௌபே ஆகியோர் வழங்கினர்.

நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தான சிகிச்சை சிறப்பாக வழங்கும் மருத்துவமனைக்கான விருது சென்னை இராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக இறந்தவரின் கைகளை மற்றவருக்கு வெற்றிகரமாக பொருத்தியதற்காக, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவர் ரமாதேவிக்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments