சிபிசிஐடி முதல்நிலை பெண் காவலர் தற்கொலை

0 348

காஞ்சிபுரம் அருகே சிபிசிஐடி முதல்நிலை பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வையாவூர் அண்ணா அவென்யூ பகுதியை சேர்ந்தவரான கோமதி, சிபிசிஐடியில் முதல் நிலை காவலராக பணிபுரிந்தார்.

அவரின் கணவர் சிவா, திருப்பத்தூர் அருகே விவசாய மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 12 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்ப பிரச்சனையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 6 மாதத்துக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அதேநேரத்தில் கணவரை பிரிந்ததால் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படும் கோமதி, வீட்டில் உள்ள அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி நேரில் விசாரணை மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments