ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிட தடை நீட்டிப்பு

0 352

ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட டிச.11 தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.கவின் இன்பதுரையும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதில் கடைசி மூன்று சுற்றுவாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை எண்ண நீதிமன்றம் உத்தரவிட்டு எண்ணிக்கையும் நடந்து முடிந்தது.

இதனிடையே, மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோரி அதிமுகவின் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை முடிவை மட்டும் வெளியிட தடை விதித்தது.

இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அப்பாவு, இன்பதுரை தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை டிசம்பர் 11ம் தேதி நடத்துவதாகவும், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை டிசம்பர் 11ம் தேதி வரை வெளியிட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments