முதலமைச்சர் முன்னிலையில் 9 தொழில் நிறுவனங்களுடன் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது

0 136

ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 9 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் நாளை கையெழுத்தாக இருக்கிறது

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற உள்ள நிகழ்வில், ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட 3 அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார்.

மேலும் 60 கோடி ரூபாய் மதிப்பில் 3 உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்களை தொடங்கி வைத்தல், 28 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 புதிய தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது.

தொழில் நிறுவனங்களின் குறைதீர்க்க உதவும் தொழில் நண்பன் என்ற இணையதளத்தையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments