அரசு மருத்துவர்களின் பணிமாறுதலை நிறுத்திவைக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

0 174

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் பணிமாறுதலை நிறுத்திவைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சார்ஜ்மெமோ எனும் குற்றச்சாட்டு குறிப்பாணையும், சிலருக்கு பணிமாறுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன. இதை எதிர்த்து 8 மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பணிமாறுதலை நிறுத்தி வைக்க கோரிய விவாகரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments