மென்பொருள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு குறைவு தான்... இருப்பினும்...

0 280

பன்னாட்டளவிலான மென்பொருள் சந்தையில், இந்தியாவின் பங்கு மிகச்சிறிய அளவிலேயே இருப்பதாகவும், ஆனால், அதேவேளையில், பெரியளவில் மென்பொருள் இறக்குமதியாளராக திகழ்கிறது.

பெங்களூருவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான சேவைகள் குறித்த கண்காட்சியில் பங்கேற்று பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ராஜீவ் குமார் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார்.

தற்போது, பன்னாட்டளவிலான மென்பொருள் உற்பத்திச் சந்தை 43 ஆயிரத்து 800 கோடி டாலர்கள் மதிப்புடையதாக உள்ளது.

இந்தியாவில் மென்பொருள் வர்த்தகம் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் நிலையில், அதில், 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மென்பொருள் மட்டுமே ஏற்றுமதியாகிறது என இந்திய தொழில்துறை கூட்டமைப்பு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக, இணைச் செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments