உடல் எடையை குறைக்க பிரபாகரனுக்கு யோசனை..! சீமான் மலரும் நினைவுகள்

0 932

இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது பிரபாகரனிடம், அவர் குண்டாக இருப்பதை சுட்டிக்காட்டி உடல் எடையை குறைக்க சொன்னதாக நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பிரபாகரன் உடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மதுரையில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , வருகிற தேர்தலில் வீட்டிற்கு ஒரு கார் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

ரஜினி மட்டுமல்லாமல் விஜயகாந்த், கமல், விஜய் போன்றோரையும் சீமான் விமர்சித்தார்.

இலங்கையில் நடந்த இறுதி போரின் போது பிரபாகரன் தனக்கு துப்பாக்கி சுட பயிற்சி அளித்த ததை நினைவு கூர்ந்த சீமான், தாம் பிரபாகரன் குண்டாக இருப்பதை சுட்டிக்காட்டி உடல் எடையை குறைக்க கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

கருணாநிதியை கடுமையாக விமர்சித்த சீமான், பிரபாகரனின் கோரிக்கையை சொல்ல முயன்றும் கடைசி வரை கருணாநிதி தன்னை சந்திக்க அனுமதிக்கவில்லை என்றார்.

யார் வந்தாலும் வராவிட்டாலும் தனி ஆளாக நின்றாவது, திமுகவை செஞ்சிவிடுவேன் என்று சூளுரைத்த சீமான், ராஜீவ் கொலை வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு பெட்டி நிறைய பணத்தை பிரபாகரன் அனுப்பி வைத்ததாக பகிரங்கப்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் தனக்கு வாக்களித்தால் தான் தமிழர்கள் வாழ முடியும் என்றும் இல்லையெனில் சாக வேண்டியதுதான் என்றும் சீமான் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments