10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான நேரம் நீட்டிப்பு..!

0 437

வரும் ஆண்டு முதல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வு நேரத்தை இரண்டரைமணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக பள்ளிக்கல்வித்துறை நீட்டித்து உள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 2020ம் ஆண்டு முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நேரம் இரண்டரை மணியில் இருந்து மூன்று மணியாக நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வுவெழுதும் மாணவர்களின் நலன் கருதி தேர்வு நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாய்மொழியாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது பொதுத்தேர்வுக்கான நேரத்தை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments