IAS அதிகாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!

0 409

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது சொத்து விவர அறிக்கையை உரிய கால கட்டத்திற்குள் தாக்கல் செய்யாவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை பாயும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளர் நலன்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், நாடு முழுவதும் உள்ள 6,699 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடங்களில், 5,205 பேர் பணியாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் உரிய படிவத்தில் தங்கள் சொத்து விவரம் குறித்த வருடாந்திர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பரம்பரை வழியாக வந்த அசையா சொத்து, சொந்தமாக வாங்கிய அசையா சொத்து, குத்தகை அல்லது அடமானத்தில் வந்துள்ள அசையா சொத்து பற்றிய விவரங்களை சொத்து விவர அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சொத்து விவர அறிக்கையை உரிய கால கட்டத்திற்குள் தெரிவிக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பணியாளர் நலன்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments