செய்தியாளரை துரத்தி துரத்தி கடித்த பன்றி.! நேரலையில் நடந்த சம்பவம்

0 517

கிரீஸ் நாட்டில் நேரலையில் செய்தி வழங்கிய செய்தியாளர் ஒருவரை, நிற்க விடாமல் பன்றி ஒன்று தொந்தரவு செய்த நிகழ்வு, நகைப்பை ஏற்படுத்தியது. உள்ளுர் தொலைக்காட்சியான ANT1-டிவியில் குட் மார்னிங் கிரீஸ் என்னும் நேரடி நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

கிரீஸ் நாட்டை தாக்கிய புயல் குறித்து, செய்தியாளர் லாப்ஸோஸ் மாண்டிகோஸ், Kineta பகுதியில் நேரலை கொடுத்துக் கொண்டிருந்தார். நேரலை துவங்கியும் லாப்ஸோஸ் மாண்டிகோஸ் சில வினாடிகள்  கேமரா முன் தோன்றவில்லை. 

இதனால் குழப்பமடைந்த கேமரா ஆபரேட்டர் சில விநாடிகள் கழித்து அவரைப் பார்த்தார். ஆனால் அவர் எந்த உள்ளூர் அதிகாரிகளையும் பேட்டி காணவில்லை. அல்லது புயலால் ஏற்பட்ட கடுமையான சேதம் குறித்த தகவல்கள் எதையும் வழங்கவில்லை.

ஆனால் செய்தியாளர் மாண்டிகோஸை பன்றி ஒன்று துரத்தி கொண்டிருந்ததை கண்டு கேமராமேன் அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்தார். அருகிலுள்ள பண்ணையிலிருந்து தப்பித்த ஒரு பன்றி தான் அவரை துரத்தியுள்ளது.

பின்னர் சில வினாடிகள் கழித்து மாண்டிகோஸ் ஃபிரேம்மிற்குள் நின்று புயல் மற்றும் மழை குறித்த லைவ் அப்டேட்களை வழங்க முயன்றார. ஆனால் நிருபர் திரையில் தோன்றியவுடன், அவர் கேமராவைச் சுற்றி ஓடத் தொடங்கினார்.

ஏனென்றால் மன்டிகோஸை அந்த பன்றி விடாமல் ஆர்வத்துடன் துரத்தியது. நிருபர் எப்படியாவது புயல் மற்றும் வெள்ளம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க முயன்றார்.

ஆனால் இறுதியில் அது முடியாமல் போனது. ஏனெனில் அந்த நிருபரை பன்றி தொடர்ந்து துன்புறுத்தியது, அவரைக் கடித்தது. இதனை அடுத்து லைவ் ஆக ஒளிபரப்பான இந்த காட்சிக்கு பத்திரிகையாளர் மன்னிப்பு கேட்டார்.

நிருபர் தனது அறிக்கையை தொடர்ந்து வழங்க முடியாது என்பது தெளிவாக தெரிந்ததால்,நேரலை உடனடியாக நிறுத்தபட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments