திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு

0 313

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை,  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று காலையில் சந்தித்துப் பேசினர்.

சிபிஐ தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. ஆனால், அதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை, கடந்த மாதம் 16ஆம் தேதி ப.சிதம்பரத்தை கைது செய்ததால், அவர் தொடர்ந்து சிறையில் இருக்கிறார்.

இந்நிலையில், இன்று காலை திகார் சிறைக்குச் சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments