கடுங்குளிரை பொருட்படுத்தாமல் 5 பூனை குட்டிகளை காப்பாற்றிய நாய்

0 315

கனடாவில் நாய் ஒன்று 5 பூனை குட்டிகளை கடும் குளிரில் இருந்து காப்பாற்றியசம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய் ஒன்று சாலையின் ஓரத்தில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் குளிரில் பனி படர்ந்து நின்றிருந்ததை கண்ட ஒருவர், அதற்கு உதவ சென்றுள்ளார். அப்போது நாயின் கீழ் 5 பூனை குட்டிகள் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்த அவர், விலங்கின ஆர்வலர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

அதையடுத்து அங்கு வந்த விலங்கின ஆர்வலர்கள் நாய் மற்றும் பூனை குட்டிகளை மீட்டதோடு, நாயின் உதவி இல்லையெனில் பூனை குட்டிகள் இறந்திருக்கும் என தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments