டெஸ்லா சைபர்டிரக் வாகனங்களை வாங்க முன்பதிவு மும்முரம்

0 546

பன்னாட்டளவில், வாகன உற்பத்தித்துறை வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கும் டெஸ்லா சைபர்டிரக் ((Tesla Cybertruck)) வாகனங்களுக்கான முன்பதிவு பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

முன்பதிவு தொடங்கிய 4 நாட்களில், ஆர்டர்கள், 2 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. முழுக்க, மின் ஆற்றலில் இயங்கவல்ல டெஸ்லா சைபர் பிக்-அப் டிரக் 3 வித மாடல்களில், சந்தைக்கு வருகிறது.

துப்பாக்கி குண்டுகளால் துளைக்க முடியாத கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ள டெஸ்லாவின் ஒரு மோட்டார் பொருத்தப்பட்ட சைபர் டிரக்கின் விலை 28 லட்ச ரூபாயாகும்.

இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட சைபர் டிரக் 36 லட்ச ரூபாய் என்றும், ஹை-எண்ட்((HighEnd)) மாடலான, மூன்று மோட்டார் பொருத்தப்பட்ட சைபர் டிரக் 50 லட்ச ரூபாய் என்றும், விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments