சி.பி.ஐ.யில் 1000 காலி பணியிடங்கள்..!

0 319

சி.பி.ஐ. அமைப்பில் 1000-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் எழுத்து பூர்வ கேள்விக்கு பதில் அளித்த மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், சி.பி.ஐ. அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 5,532 ஆகும் என்றார். இதில் 4,503 இடங்கள் நிரப்பப்பட்டு இருக்கும் நிலையில், 1,029 இடங்கள் காலியாக உள்ளதாக அவர் கூறினார்.

சிபிஐயில் மொத்தமுள்ள 370 சட்ட அதிகாரி பணியிடங்களில், 296 பேர் தான் பணியாற்றி வருவதாகவும், 162 தொழில்நுட்ப அதிகாரிகளில், 67 பேர் மட்டுமே பணியில் உள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு சி.பி.ஐ. தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments