இன்று உதயமாகும் தென்காசி மாவட்டத்தின் சிறப்புகள்..!

0 798

எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி தான் இது...

இந்த மலையையொட்டி தெற்கே ஆழ்வார்குறிச்சி முதல் வடக்கே சிவகிரி வரை பரந்து விரிந்திருப்பது தென்காசி மாவட்டம்...

இதனால் ராமநதி, கடனாநதி, குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி,ஆகிய பெரிய நீர்த்தேக்கங்களும், மோட்டை, ஸ்ரீமூலப் பேரி ஆகிய இரு சிறிய நீர்த்தேக்கங்களும் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளன

அருவிகளின் நகரமாம் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி, நெய்யருவி, ஆகியவற்றை பெற்றிருப்பது தென்காசி மாவட்டம்..

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகும் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரும்,குண்டாறு நதி,ஹரிஹர நதி,சிற்றாறு, ஆகிய நதிகளின் நீர் தாமிரபரணியில் சென்று கலக்கிறது.

பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, சுரண்டை ,கடையநல்லூர் ஆகிய இடங்களில் இருந்துதான் கேரள மாநிலத்திற்கு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன.

தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம், குற்றாலம் குற்றாலநாதர் ஆலயம் ,இலஞ்சி குமரன் ஆலயம், புளியரை தஷ்ணாமூர்த்தி ஆலயம், பண்பொழி திருமலை முருகன் ஆலயம், இலத்தூர் சனி பகவான் ஆலயம்,சங்கரன்கோவில் சங்கர நயினார் கோவில் ஆலயம் ஆகியவற்றுடன் பொட்டல்புதூர் பள்ளிவாசல், புனித மிக்கேல் அதிதூதர் சின்னப்பர் ஆலையம் ஆகியவை அமைந்திருப்பது இந்த மாவட்டத்தில்தான்....

பூலித்தேவன், வீர வாஞ்சிநாதன் போன்ற வரலாற்றில் இடம்பிடித்த பலரை அளித்ததும் இதே தென்காசி மாவட்டம்தான்.

தமிழக-கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதியாக செங்கோட்டை புளியரை அருகில் உள்ள கோட்டை வாசல் விளங்குகிறது. பெரிய அளவில் தொழிற்சாலைகள் இல்லாவிட்டாலும் விவசாயம் செழித்து காணப்படுகிறது.

புதிய மாவட்டம் உருவாகியுள்ளதன் மூலம் தென்காசி மக்களின் 36 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியுள்ளது. செழுமையான விவசாய பூமியாக உள்ள இப்பகுதி, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் வளம் பெற வேண்டும் என்பதே தென்காசி மக்களின் எதிர்பார்ப்பு...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments