IIT மாணவி பாத்திமா வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு

0 259

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தமிழக தலைவர் அஸ்வத்தமன் தாக்கல் செய்த மனுவில், சென்னை ஐஐடியில் கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போது வரை 5 மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், இத்தகைய மரணங்கள் தொடரும் நிலையில் மாணவி பாத்திமாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கோ அல்லது தனி விசாரணை அமைப்புக்கோ மாற்ற வேண்டுமென அவர் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments