தெரு நாய்க்கு பயிற்சி அளித்த உத்ரகாண்ட் போலீசார்

0 305

உத்தரகாண்ட் மாநில காவல்துறையால் பயிற்சி அளிக்கப்பட்ட தெரு நாய், பிற வெளிநாட்டு இன நாய்களை காட்டிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறது.

ஜெர்மன் செப்பர்ட், லேப்ரடார் போன்ற வெளிநாட்டு இன நாய்களுக்கு பயிற்சி அளித்து, அதை தங்களது பணிக்காக காவல்துறையினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், உத்தரகாண்ட் போலீஸார், தெரு நாய் ஒன்றுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.

வெளிநாட்டு இன நாய்களை காட்டிலும், அந்த நாய் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தீ வளையத்துக்குள் லாவகமாக பாய்ந்து செல்லுதல், தடை தாண்டுதல் போன்றவற்றிலும் அசத்தி வருகிறது.

உத்தரகாண்ட் போலீஸாரால், டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள அந்த நாயின் சாகச காட்சிகள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments