உள்ளாட்சித் தேர்தல்: அவசர ஆலோசனை

0 586

ள்ளாட்சி தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து, வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருக்கிறார்.

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடியும், நீதிமன்றத்தில் அளித்திருக்கும் வாக்குறுதியின்படியும், அடுத்த மாதம் 13ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்து, அறிவிப்பாணையை வெளியிட்டு, அதன் அறிக்கையை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சமர்பிக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால், உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியிருக்கிறது.

வாக்குச்சாவடிகள், வாக்காளர் பட்டியல், வாக்குச்சீட்டுகள் தயாரிப்பு, வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள், மறுவரையறை செய்யப்பட்ட எல்லைகள் உள்ளிட்டவைத் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தார். இந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய ஆறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முன் ஏற்பாடு பணிகள் தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். சென்னையில் இருந்தவாறு, காணொலி காட்சி மூலம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் பணிபுரிய உள்ள உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்களுக்கான பயிற்சி ரிப்பன் கட்டிடத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. வேட்புமனு பூர்த்தி செய்வது உட்பட தேர்தல் பணிகள் மற்றும் விவரங்களை இணையத்தில் பதிவேற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments