சிவசேனா கூட்டணிக்கு சோனியா ஒப்புதல்..?

0 700

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவியது. இதையடுத்து ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனிடையே, பாஜகவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 3 கட்சிகளும் தொடர்ந்து பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தின.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், டெல்லியில் கட்சியின் மேலிடத் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரை இன்று சந்தித்துப் பேசினர். இதனை தொடர்ந்து சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க சோனியா ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மராட்டியத்தின் அரசு அமைப்பது குறித்து வியாழக்கிழமை முக்கிய தகவல் வெளியாகும் என்று கூறியிருந்தார். இதனால் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது-

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments