முழு அரசு மரியாதையுடன் பணி ஓய்வு பெற்ற நாய்கள்

0 252

டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின், சிஐஎஸ்எப் பிரிவில் பணியிலிருந்த 7 நாய்கள், பணி ஓய்வு பெறும் விழா டெல்லியில் நடைபெற்றது.

துணை பாதுகாப்பு படையில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றிய இந்த நாய்கள் தற்போது பணிஓய்வு பெற்றுள்ளன. அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் அவற்றுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் ஓய்வு பெற்றன.

முன்னதாக விழாவுக்கு அழைத்து வரப்பட்ட நாய்களுக்கு வீரர்கள் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். மத்திய தொழில் பாதுகாப்புப்படை வரலாற்றிலேயே, நாய்கள் ஓய்வு பெறுவதற்கு விழா நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments