மாத தவணையில் பணம் செலுத்தினால் தங்க நாணயம் - சிட் பண்டு நிறுவனம் மீது புகார்

0 775

சென்னையில், மாத தவணையில் பணம் செலுத்தினால் தங்க நாணயம் கிடைக்கும் என நூற்றுக்கணக்கானவர்களை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ஒரு வருடத்திற்கு மாத மாதம் பணம் செலுத்தினால், தீபாவளிக்கு 15 நாட்கள் முன்பாக செலுத்திய தொகையை விட கூடுதல் மதிப்புடைய தங்க நாணயம், வெள்ளி நாணயம் மற்றும் பட்டாசு பெட்டி பரிசு பொருட்கள் கிடைக்கும் ஆசை வார்த்த கூற நூற்றுக்கணக்கானோர் இந்த திட்டத்தில் பணம் செலுத்தியுள்ளனர்.

முகப்பேரை சேர்ந்த ஆனந்த் பாபு என்பவர் நடத்தி வந்த சிட் பண்டு நிறுவனத்தில் மாத மாதம் 1000 ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியவர்களுக்கு தீபாவளிக்கு முன்பு பட்டாசு பெட்டிகள் மட்டும் கொடுத்துவிட்டு தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்திற்கு பணம் செலுத்தியவர்களை வரவழைத்த சிட் பண்டு நிறுவனத்தின் ஊழியர்கள், தங்க நாணயம் வழங்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் எனவும், அதுவரை போலீசில் புகார் கொடுக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை சிறைப்பிடித்தனர். தகவலறிந்து வந்த வளசரவாக்கம் போலீசார் சமாதானம் செய்து இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments