தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சியை நடிகர்கள் விமர்சித்தால், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

0 183

தமிழக அரசு மீது நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் போன்றோர் விமர்சனங்களை முன்வைக்கும்போது, அது அவர்களையே காயப்படுத்தும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகநகரில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் ஆட்சி அரியணை ஏற வேண்டும் என நடிகர்கள் நினைப்பதாகவும், தமிழகத்தில் நடக்கும் நல்லாட்சியை விமர்சித்தால், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments