செவிலியர் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் - 10க்கும் மேற்பட்டோர் காயம்

0 255

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் இம்மானுவேல் அரசர் கல்லூரியில் மாணவர்களுக்கிடேயே மோதல் ஏற்பட்டு 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள செவிலியர் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியில் ரேகிங் தொடர்பான முன்விரோத்தத்தில் கஞ்சா போதையில் மாணவர்கள் இரு தரப்பாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இரு தரப்பு மாணவர்கள், மாணவிகள், பேராசிரியர், கல்லூரி ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் மோதலை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மோதல் தொடர்பாக 6 மாணவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பதற்றம் நீடிப்பதால் போலீசாரின் அறிவுறுத்தலின் படி மறு உத்தரவு வரும்வரை வளாகத்திலுள்ள அனைத்து கல்லூரிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments