விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு புதிய அரசாணை வெளியீடு - அமைச்சர் தங்கமணி

0 226

விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டு, புதிய அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது என்றும், சிலர் அரசியல் காரணங்களுக்காக போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் எனவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

ஈரோடு மாவட்டம் பாசூர் பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், கேரளாவிலும் பல்வேறு இடங்களில் விளைநிலங்களில் தான் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 

விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்றும் கூறினார்.

மேலும் விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் கேட்ட நஷ்டஈட்டை தமிழக அரசு கொடுத்துள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments