இந்திய பொருட்கள் மீது சீனா ஆர்வம்

0 338

இந்தியாவிலிருந்து, மருதாணி பவுடர், முருங்கைக்காய் பவுடர், மிளகாய் பொடி, மதிப்புக்கூட்டப்பட்ட தேயிலைத் தூள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதில், சீனா மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில், ஷாங்காயில் நடைபெற்ற இறக்குமதியாளர்கள் கண்காட்சியில், மேற்கண்ட பொருட்கள் குறித்து, ஏராளமான சீன இறக்குமதியாளர்கள் போட்டிப்போட்டு விசாரித்ததாக கூறப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மருதாணி பவுடர் ஏற்றுமதியாளர் ஒருவருக்கு, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர் கிடைத்திருப்பதாகவும், தகவல் வெளியாகியிருக்கிறது.

நடப்பு நிதியாண்டில், சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் உற்பத்தி பொருட்களை, இந்தியா ஏற்றுமதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments