கரூர் தொழிலதிபர் வீட்டில் 4வது நாளாக வருமான வரி சோதனை நீடிப்பு... ரூ.435 கோடி வரி ஏய்ப்பு

0 880

கரூரில் தனியார் கொசுவலை நிறுவனம் 435 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெண்ணைமலை பகுதியில் உள்ள ஷோபிகா என்ற நிறுவனத்தில் கடந்த 15ந் தேதி முதல் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உரிமையாளரின் வீடு, கொசுவலை நிறுவனம் உள்ளிட்ட 20 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் உரிமையாளர் வீட்டில் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மொத்தம் 32 கோடியே 60 லட்சம் ரூபாய் பணம், 10 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.

435 கோடி ரூபாய்க்கு இந்நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. போலி ரசீதுகள் மூலம் செலவை அதிகரித்துக் காட்டி வருவாயை மறைத்ததாகவும், பல ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே, 4வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை நீடித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments