ஐக்கிய அரபு அமீரக பயணிகளுக்கு உடனடி விசா வழங்கும் திட்டம்

0 321

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு உடனடியாக விமான நிலையத்திலேயே விசா வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இந்த விசா 60 நாட்களுக்கு அமலில் இருக்கும். சுற்றுலா, இருநாட்டு மக்களிடையே நல்லுறவு மற்றும் வர்த்தக நலன்கள் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சென்னை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய விமான நிலையங்களில் இந்த வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு முறைப்படி முன்பு விசா பெற்ற பயணிகளுக்கும், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விசா பெற்ற பயணிகளுக்கும் இச்சலுகை வழங்கப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments