பாகிஸ்தானில் உள்ள புனிதத் தலங்களை தரிசிக்க சீக்கியர்கள் ஆர்வம்

0 201

பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குருநானக்கின் பிறப்பிடமாக கருதப்படும் நான்கனா சாகிப்புக்கு பேருந்து சேவையை தொடங்கும்படி மத்திய அரசுக்கு சீக்கியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள கர்த்தார்புர் குருதுவாராவுக்கான பாதையை இருநாட்டு அரசுகளும் திறந்துவிட்டன. விசா இல்லாமலேயே எல்லை தாண்டி சீக்கியர் புனித்தலங்களை தரிசிக்க தினசரி 5 ஆயிரம் பேருக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் குருநானக் பிறந்த இடமாக கருதப்படும் நான்கனா சாகிப் குருதுவாராவிற்கும் பேருந்து சேவையை இருநாட்டு அரசுகளும் ஏற்படுத்த வேண்டும் என்று சீக்கியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments