உச்சநீதிமன்ற கொலீஜிய உறுப்பினராக தமிழக நீதிபதி பானுமதி

0 252

உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி பானுமதி இடம்பெற்றுள்ளார். தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப்.நாரிமன் ஆகியோருடன் பானுமதியும் கொலீஜிய கூட்டங்களில் பங்கேற்பார்.

அடுத்த ஆண்டு ஜூலை மாதம் ஓய்வுபெற இருப்பதால், 9 மாதங்கள் கொலீஜியத்தில் அவர் அங்கம் வகிப்பார். 1988ல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றிய பானுமதி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். 13 ஆண்டுகளுக்கு முன் ரூமா பால் என்ற பெண் நீதிபதி கொலீஜியத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது பானுமதி இடம்பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments