பேருந்தின் கியரை மாற்றி விளையாடிய மாணவிகள்

0 688

சாலையில் சென்று கொண்டிருந்த போது சுற்றுலாப் பேருந்தின் கியரை, கல்லூரி மாணவிகள் அடிக்கடி மாற்றி வீளையாடிய வீடியோ வெளியானதை அடுத்து, அந்த பேருந்து ஓட்டுநரின் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

வயநாடை அடுத்த கல்பேட்டா பகுதியைச் சேர்ந்த மாணவிகள் அண்மையில் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது பேருந்தினுள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஏக உற்சாகமாய் கும்மாளமிட்டு சென்றனர்.

அப்போது சில மாணவிகள் டிரைவர் அருகே சென்று விளையாட்டாக பேருந்தின் கியரை அடிக்கடி மாற்றி மாற்றி விளையாடினர். மாணவிகளை கண்டிக்க வேண்டிய டிரைவரோ, நீங்க கியர் போடுங்க நான் ஸ்பீட் எடுக்குறேன் என அசால்ட்டாக பேருந்தை இயக்கினார்.

மாணவிகளின் இந்த ஆபத்தான செயலை பேருந்தில் வந்த பிற மாணவிகள், மொபைலிலில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. நொடி பிசகினாலும் பேருந்து விபத்தில் சிக்கியிருக்கும், அல்லது சாலையில் வருவோர் மீது மோதி விபரீதமாகி இருக்கும்.

ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் மாணவிகளுடன் சேர்ந்து டிரைவர் ஷாஜி சிரித்தபடி சாகச பயணத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ மிகவும் வேகமாக பரவியது.

இந்த வீடியோ குறித்து தகவல் அறிந்த கேரள மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரிகள், பேருந்து மற்றும் ஓட்டுநர் பற்றிய விவரங்களை சேகரித்தனர்.

பின்னர் மோட்டார் வாகன போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் பேருந்தை இயக்கியதை ஓட்டுநர் ஷாஜி ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து 6 மாதங்களுக்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துஅதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பேருந்தில் வந்தவர்களை பத்திரமாக அழைத்து செல்லும் பொறுப்பிலிருந்த ஷாஜி, மாணவிகளின் ஆசைக்காக விதியை மீறி செய்த செயலால் லைசென்ஸ் ரத்து நடவடிக்கைக்கு உள்ளாகி இருப்பது அவருக்கு தக்க பாடமாக இருக்கும் என நம்புவோம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments