உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக போப்டே இன்று பதவியேற்பு

0 254

உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே இன்று பதவியேற்கிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். 2021ம் ஆண்டு ஏப்ரல் 23ந் தேதி ஓய்வுபெறும் வரை 18 மாதங்கள் போப்டே தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த போப்டே மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 2000ம் ஆண்டில் கூடுதல் நீதிபதியாகப் பொறுப்பேற்ற அவர், பின்னர் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

2013ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பதவி வகித்து வருகிறார். தனிநபர் ரகசியம் தொடர்பான வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகள் பலவற்றில் தீர்ப்பு வழங்கியுள்ள போப்டே, அண்மையில் அயோத்தி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்விலும் இடம்பெற்றிருந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments