ஜம்மு காஷ்மீரில் 3 மாதங்களுக்குப் பின் தொடங்கிய ரயில் சேவை

0 280

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட ரயில் சேவை 3 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில்சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், 3 மாதங்களுக்குப் பின்னர், ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் இருந்து, பனிஹல் வரை ரயில் இயக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். பாதுகாப்புக் காரணங்களை கருத்தில்கொண்டு, காலை 10 மணிமுதல், 3 மணி வரை இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments